பிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்!

பதிவர் : சிகரம் on 2017-10-05 23:39:14

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஜூன் 25, 2017 இல் துவங்கி செப்டெம்பர் 30, 2017 இல் முடிவுக்கு வந்திருக்கிறது. 98 நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியில் 19 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸ்டார் விஜய் இந்த மெய்நிகர் நிகழ்ச்சித் தொடரினை வெற்றிகரமாக ஒளிபரப்பாக்கியது.
    

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்பதே சில போட்டியாளர்கள் பிக்பாஸில் பங்குபற்றவும் பல பார்வையாளர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கவும் காரணமாக அமைந்திருந்தது.

பிக்பாஸ் தமிழ் மாபெரும் இறுதிப்போட்டி செப்டெம்பர் 30, 2017 இல் கோலாகலமாக இடம்பெற்றது. இறுதிநாள் நிகழ்ச்சியில் நமீதா மற்றும் ஸ்ரீ ஆகியோரைத் தவிர ஏனைய 17 போட்டியாளர்களும் கலந்து கொண்டனர். நடனக் கலைஞர் சாண்டியின் நடனத்துடன் துவங்கியது இறுதிப்போட்டி. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் ஆரவ் முதலிடத்தைப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார். சினேகன் இரண்டாம் இடத்தையும் ஹரிஷ் மற்றும் கணேஷ் ஆகியோர் முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைக் கைப்பற்றினர். பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் விவோ ( Vivo ) திறன்பேசி ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

30 ஒளிப்பதிவுக் கருவிகள், 100 நாட்கள் மக்களின் வாழ்வியலைப் பிரதிபலித்த பிக்பாஸ் தமிழ் முதலாம் பருவம் இத்தோடு முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த வருடமளவில் இரண்டாம் பருவத்தை எதிர்பார்க்கலாம்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO


குறிச்சொற்கள்: #BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account