பிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்! விஜய் தொலைக்காட்சி அறிவிப்பு!

பதிவர் : சிகரம் on 2017-09-21 23:40:01

பிக்பாஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை விஜய் தொலைக்காட்சி வழங்கியுள்ளது. ஜூன் 25 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமானது. பிக்பாஸ் இன் இறுதி நாளாக அக்டோபர் இரண்டாம் திகதியே அமைகிறது.

இந்நிலையில் அக்டோபர் இரண்டாம் திகதி முதல் "தமிழ்க் கடவுள் முருகன்" என்னும் தொலைக்காட்சித் தொடர் பிக்பாஸ் ஒளிபரப்பு நேரமான இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. ஆகவே அக்டோபர் முதலாம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் விஜய் தொலைக்காட்சி செப்டெம்பர் 30 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாக்க தீர்மானித்துள்ளது. ஆகவே கணக்குப்படி 97 ஆம் நாளில் நிகழ்ச்சி நிறைவடைகிறது. 

முதல் நாள் நிகழ்வுகளைத் தொகுத்து அடுத்த நாள் காட்டுகிறார்கள் என்பது தான் நம் கருதுகோள். ஆனால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறதா என்னும் சந்தேகம் இங்கு எழுகிறது.

பிக்பாஸ் இறுதிப்போட்டி வீட்டுக்குள்ளேயே நடைபெறுமா அல்லது பிரம்மாண்ட மேடையில் நடைபெறுமா என்பது குறித்து தகவலில்லை. எது எப்படியிருந்த போதிலும் பிக்பாஸ் வெற்றியாளருக்கு எமது முன்கூட்டிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!

#BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV #VijayTelevision #VivoBiggBoss #BB #BBTamil #KamalHassan #SigaramCO


குறிச்சொற்கள்: #BIGGBOSS #BIGGBOSSTAMIL #VIVOBIGGBOSS #STARVIJAY #VIJAYTELIVISION #KAMALHASSAN #REALITYSHOW #BIGBROTHER #BOGBOSS11 #BIGGBOSSTAMIL1 #BiggBoss #BiggBossTamil #BiggBossFinal #BiggBossTamilFinal #VijayTV
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account