விஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #YesorNo

பதிவர் : சிகரம் on 2017-09-17 16:32:35

விஜய் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகி வந்த கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ் (Kings Of Comedy Juniors) நிகழ்ச்சி முடிவடைந்துள்ளதை அடுத்து புதிய நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சனிக்கிழமைகளில் யெஸ் ஆர் நோ (YesorNo) நிகழ்ச்சியும் ஞாயிறுகளில் சின்னத்திரை திருமதிகளின் போட்டி நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகவுள்ளது.

சன் தொலைக்காட்சி சின்னத்திரை தொடர்களுக்காகவே புகழ் பெற்ற தொலைக்காட்சி. அது போலவே விஜய் தொலைக்காட்சி மெய்நிகர் நிகழ்ச்சிகள் (Reality Show) மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானது. சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு, அது இது எது மற்றும் ஜோடி நம்பர் வன் போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். விஜய் தொலைக்காட்சி செப்டெம்பர் 23 சனிக்கிழமை முதல் ஒளிபரப்பவுள்ள புத்தம்புதிய நிகழ்ச்சி தான் இந்த யெஸ் ஆர் நோ (YesorNo). 128 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றவுள்ளனர். மொத்தம் ஏழு சுற்றுக்கள். இறுதிப் போட்டியின் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப் படுவார். பெரும்பாலும் வெள்ளித் திரைப் பிரபலங்கள் அல்லது சின்னத் திரைப் பிரபலங்கள் பங்குபற்றும் நிகழ்ச்சியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. முதல் சுற்றில் 128 போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள் எனவும் ஒவ்வொரு சுற்றுக்களின் முடிவிலும் சிலர் வெளியேற்றப்படுவார்கள் எனவும் ஊகிக்கலாம்.
 
இது ஒரு அறிவு சார்ந்த போட்டி நிகழ்ச்சியாக இருக்கும் என நம்பலாம். உடல் சார்ந்த போட்டிகள் பல ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றன. நகைச்சுவை சார்ந்து இருக்காது எனவும் ஊகிக்க முடியும். மேலதிக விவரங்கள் விரைவில்...

#YesorNo #VIJAYTV #VIJAYTELIVISION #REALITYSHOW #SIGARAMCO #HOTSTARகுறிச்சொற்கள்: #YesorNo #VIJAYTV #VIJAYTELIVISION #REALITYSHOW #SIGARAMCO #HOTSTAR
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account