துபாயில் இரவு-பகல் டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது இலங்கை!

பதிவர் : சிகரம் on 2017-09-10 00:05:50

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் ஒன்பது போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இம்மாதம் (செப்டெம்பர்) 28 முதல் அக்டோபர் 29 வரை விளையாடவுள்ளது. இதில் ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டி அடங்கலாக இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று 20-இருபது போட்டிகள் நடைபெறவுள்ளன. மூன்றாவதும் இறுதியுமான 20-இருபது போட்டி தவிர ஏனைய அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE - United Arab Emirates) நடைபெறவுள்ளன. இறுதி 20-இருபது போட்டியை பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் மாத்திரமே லாகூரில் இப்போட்டி நடைபெறும்.நடைபெறவுள்ள போட்டிகளின் பட்டியல்:

செப்டெம்பர் 28 - அக்டோபர் 02 - முதலாவது டெஸ்ட், அபு தாபி

அக்டோபர் 06 - அக்டோபர் 10 - இரண்டாவது டெஸ்ட் , துபாய் ( இரவு / பகல் )

அக்டோபர் 13 - முதலாவது ஒரு நாள் போட்டி , துபாய்

அக்டோபர் 16 - இரண்டாவது ஒரு நாள் போட்டி , அபு தாபி 

அக்டோபர் 18 - மூன்றாவது ஒரு நாள் போட்டி, அபு தாபி
அக்டோபர் 20 - நான்காவது ஒரு நாள் போட்டி , ஷார்ஜா 

அக்டோபர் 23 -  ஐந்தாவது ஒரு நாள் போட்டி , ஷார்ஜா
அக்டோபர் 26 - முதலாவது 20-இருபது போட்டி , அபு தாபி
அக்டோபர் 27 - இரண்டாவது 20-இருபது போட்டி , அபு தாபி
அக்டோபர் 29 - மூன்றாவது 20-இருபது போட்டி , லாகூர் பாகிஸ்தான் (பாதுகாப்பு காரணங்களுக்கமைய மாற்றமடையலாம்)
#SLvsPAK #SLvPAK #DUBAI #ABUDHABI #DNTest #PCB #SLC #LAHORE #T20 குறிச்சொற்கள்: #SLvsPAK #SLvPAK #DUBAI #ABUDHABI #DNTest #PCB #SLC #LAHORE #T20
கருத்துக்கள்
உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது

Create AccountLog In Your Account